ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த சைட் மியூசியம் இந்தியாவிலேயே முதல் முறையாக திறக்கப்பட்டது. இந்த சைட் மியூசியத்தினை கடந்த 5 ந்தேதி கனிமொழி எம்.பி முன்னிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். இந்த மியூசியத்தினை தினந்தோறும் காலை 8 மணி முதல் 5 மணி வரை பார்வையாளர்கள் இலவசமாக பார்வையிட மத்திய தொல்லியல் துறையினர் அனுமதித்து உள்ளனர். தற்போது ஆதிச்சநல்லூரில் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். நெல்லை தூத்துக்குடி மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். பள்ளி விடுமுறை காலங்களில் அங்கம்பக்கத்தில் உள்ளவர்கள் குழந்தைகளை கூட்டிக்கொண்டு குடும்பத்துடன் ஆதிச்சநல்லூருக்கு படை எடுக்கிறார்கள் எனவே எப்போதுமே ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தில் மக்கள் கூட்டம் உள்ளது. இதற்கிடையில் அதிகாரிகளும் இவ்விடத்துக்கு வருகை தருகிறார்கள். இந்த இடத்துக்கு தூத்துக்குடி மாவட்ட ஊரக கோட்டம், செயற்பொறியாளர் முத்துராஜ், செய்துங்கநல்லூர் உதவி யறியாளர் சுரேஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். அவர்களுக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விளக்கம் அளித்தார்.

ஆதிச்சநல்லூர் வருகை தரும் பார்வையாளர்களை கவரும் வண்ணம் கூடுதலாக விளையாட்டு பூங்கா, தாமிரபரணி ஆற்றில் படகு சர்வீஸ் உள்பட பல துவங்க வேண்டும் என பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


