தூத்துக்குடியில் TRB நடத்தும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு வகுப்புகள் 21ம் தேதி துவங்குகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் (TRB) ஆண்டு திட்ட நிரலில் 6553 இடைநிலை ஆசிரியர் (Secondary Grade Teachers) காலிபணியிடங்களுக்கான தேர்வு மற்றும் 3587 பட்டதாரி ஆசிரியர் (BT Assistant) காலிபணியிடங்களுக்கான தேர்வும் இந்த ஆண்டு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் பொருட்டு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 21.08.2023 (திங்கட்கிழமை) அன்று பிற்பகல் 02.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் அலுவலக நூலகத்தில் உள்ளது. மேலும் வாரம்தோறும் இலவச மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.
இந்த பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு அலுவலக வேலைநாட்களில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடிக்கு நேரில் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நேரில் வரஇயலாத பட்சத்தில் உங்கள் அலைபேசியை பயன்படுத்தி Thoothukudi Employment office என்ற Telegrame சேனலில் கொடுக்கப்பட்டுள்ள Google Form-மை பூர்த்தி செய்து பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பம் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 0461 – 2340159 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.


