கருங்குளம் வட்டார வள மையத்தில் வட்டார அளவிலான பள்ளி சொல்லா குழந்தைகள் கண்டறியும் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளில் உள்ள பள்ளி செல்லா குழந்தைகள் பெயர் பட்டியல் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு வழங்கப்பட்டது. அதிக அளவில் பள்ளி செல்லா குழந்தைகள் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பள்ளி அளவிலான பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும் குழுவினுடன் இணைந்து இடைநின்ற மாணவர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது


