நாகலாபுரத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளையை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் 27வது புதிய கிளையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார். மார்கண்டேயன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 65 பயனாளிகளுக்கு ரூ.27.95 லட்சம் மதிப்பிலான கடன் உதவித் தொகையை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார சுவாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் சிவகாமி, தூத்துக்குடி சரக துணைப்பதிவாளர் ரவீந்திரன், கிளை மேலாளர் சுந்தரேஸ்வரர், ஒன்றிய கூட்டுறவு சார்பதிவாளர் சாம் டேனியல் ராஜ், புதூர் ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வராஜ், மும்மூர்த்தி, அன்பு ராஜன், சின்ன மாரிமுத்து, ராமசுப்பு, புதூர் பேரூர் கழக செயலாளர் மருது பாண்டியன், பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா அழகுராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


