தூய சவேரியார் தொழில்நுட்பக் கல்லூரியில் 77வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைமை தாங்கி சுதந்திர தின உரையை கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஜாய்ஸ் மேரி, துறைத் தலைவர்கள் வெங்கடேஷ், அமலன், ஆறுமுக சேகர், பென் மேத்யூ, விரிவுரையாளர்கள் சந்திரசேகரன், கண்ணன், சீனிவாசன், ஆய்வக போதகர் ஹைதர் அலி, உதவியாளர் கல்யாணி, போக்குவரத்து பொறுப்பாளர் கோவிந்தராஜ் மற்றும் அனைத்து நிலையில் உள்ள பணியாளர்களும் கலந்து கொண்டனர். திரு ஆறுமுக சேகர் என் எஸ் எஸ் அலுவலர் மற்றும் இயந்திரவியல் துறை தலைவர் நிகழ்ச்சியை வரவேற்றார். மூன்றாம் ஆண்டு மாணவர் பரதன் நன்றி உரை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் செய்திருந்தார்கள்


