செய்துங்கநல்லூர் அருகில் உள்ள ஆழிகுடி ஆர்.சி. துவக்கப்பள்ளியில் சுதந்திர தினவிழாநடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை ஜெசி தலைமை வகித்தார். பஞ்சாயத்து தலைவர் முருகேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் கண்கவர் நிகழ்ச்சிகளும், மாணவ மாணவிகளின் உடற்பயிற்சியும் நடந்தது. சமூக சேவகர் தினேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆசிரியர் லூயிஸ் நன்றி கூறினார்.


