தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளியில் இருபெரும் விழா நடைபெற்றது
தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளியின் நிறுவனர் குலபதி ஏ.பி.சி.வீரபாகு நாற்பத்தி ஒன்றாவது ஆண்டு நினைவு தின விழாவும், வ.உ.சி.இலக்கிய மன்ற துவக்கவிழாவும் நடைபெற்றது. விழாவிற்கு ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி வேதியியல் துறைத் தலைவர் கோகிலா சுபத்ரா கிறிஸ்டி தலைமையேற்று சொற்பொழிவு ஆற்றினார்.
ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை நீதா வ.உ.சி இலக்கிய மன்றத்தை துவக்கிவைத்து இலக்கிய சிந்தனைகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறந்த கலை நிகழ்ச்சிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார்.
குலபதி நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன. முதுகலை தமிழாசிரியை சங்கரி என்ற ரேவதி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள். பட்டதாரி தமிழாசிரியை அந்தோணி ஆஸ்மின் நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியைகள் , மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.


