தூத்துக்குடியில், இன்னர்வீல் கிளப் – ஸ்பிக் நகர் சார்பில் “போதை வேண்டாம்” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி பிஎம்சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், தூத்துக்குடி இன்னர்வீல் கிளப் – ஸ்பிக் நகர் சார்பில் மூத்த மற்றும் புகழ்பெற்ற மனநல மருத்துவர் சிவசைலம் தலைமையில் “போதை வேண்டாம்” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் போதை இல்லாத நாளைய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று உறுதி மொழி ஏற்றுக் கொள்ளப்டப்டது. இதில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இன்னர்வீல் கிளப் – ஸ்பிக் நகர் அமைப்பினர் செய்திருந்தனர்.


