நாசரேத்தில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி யை பேரூராட்சி தலைவர் நிர்மலா ரவி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பேரூராட்சிக்குட்பட்ட கேவிகே சாமி அருகே உள்ள மில்ரோடு, வகுத்தான்குப்பம் 7வது தெரு முழுவதும் மற்றும் சந்தை எதிர் புறம் ஆகிய இடங்களில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகளை பேரூராட்சி தலைவர் நிர்மலா ரவி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன், துணை தலைவர் அருண் சாமுவேல், இளநிலை பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி செல்வகுமார், வார்டு கவுன்சிலர்கள் சாமுவேல், அதிசயமணி, ஜேம்ஸ், ஐஜினஸ் குமார்,லீதியாள்,ஜெயா,பெனிட்ரோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.


