ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை பள்ளி மேலாண்மைக் குழுவின் சார்பாக தூத்துக்குடி நகர்புறம் மற்றும் ஊரக வளமையங்கள் இணைந்து நடத்திய உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சிக் கூட்டம் தூத்துக்குடி மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
மேயர் ஜெகன் பெரியசாமி அதன் கையேடுகளை வழங்கி துவக்கி வைத்து பேசுகையில் மாநகராட்சி நிர்வாகத்தின் 21 பள்ளிகள் செயல்படுகின்றன. அதற்கு தேவையான கட்டமைப்பு பணிகளை முழுமையாக செய்து கொடுத்து தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் பல நிகழ்வுகளில் கூறுவதை போல் கல்வியும் மருத்துவதுறையும் எனக்கு இருகண்கள் என்ற வழியை பின்பற்றும் வகையில் கல்வியை ஊக்குவித்து வருகிறோம் மேலும் தேவையான கட்டமைப்பு பணிகளை செய்து கொடுப்பதற்கும் தயாராக இருக்கிறோம் என்று பேசினார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி சிறப்புரையாற்றினார். முன்னதாக உதவி திட்ட அலுவலர் முனியசாமி வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் ஆசிரியர்கள் பயிற்றுநர்கள் இஸ்ரவேல், பாலையா, மற்றும் கலெக்டர் அலுவலகத்தை சேர்ந்த புவனேஸ்வரி ஆகியோர் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி, பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா, மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, கவுன்சிலர்கள் சந்திரபோஸ், கீதாமுருகேசன், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், தெய்வேந்திரன், சரவணக்குமார், ஜாக்குலின்ஜெயா, பேபி ஏஞ்சலின், கற்பககனி, எடின்டா, முத்துமாரி, உள்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையாளர்கள் சார்லஸ், பார்வதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசெல்வி, கிருஷ்ணவேணி, ஆசிரியர் பயிற்றுநர் மேடைபாண்டி, செல்வி, ஆகியோர் செய்திருந்தனர்.


