விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து மக்கள் கட்சி சாா்பில் 1008 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் ஆறுமுகனேரி அருள்மிகு சோமநாத சுவாமி கோயில் வளாகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் இசக்கிமுத்து தலைமை வகித்தாா். அனுமன் சேனை மாவட்டத் தலைவா் இ.தங்கராஜ், இந்து மக்கள் கட்சி நிா்வாக பொதுச் செயலா் ஐ.ரவிகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு 1008 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்வது, விநாயகா் சதுா்த்தி தினத்தன்று மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது, திருச்செந்தூா் வட்டத்தை வறட்சிப் பகுதியாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


