திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் திருக்கோயில் 17 ஆம் ஆண்டு கொடை விழா வெகு சிறப்பாக நடந்தது.
கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று 7.8.2023 அன்று காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகளும், மதியம் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், மதியம் 1 மணிக்கு சங்கு முகத்திலிருந்து தீர்த்தம் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது.
மாலை புனித தீர்த்தம் எடுத்து வந்து கும்பம் ஏற்றுதலும், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 8 மணிக்கு மாக்காப்பு அலங்கார பூஜை நடந்தது.
இன்று 8.8.2023 அன்று காலை 4 மணிக்கு கணபதி ஹோமம், சக்தி ஹோமத்துடன் கொடை விழா தொடங்கியது. காலை 7 மணிக்கு சிறப்பு தீபாராதனையுடன் கருங்குளம் ஆற்றில் இருந்து கரகம் தீச்சட்டி எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.
12 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், அதன் பின்னர் அன்னதானமும் நடந்தது. மாலை 4 மணிக்கு பொங்கல் இடுதல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு கனிவகை பூஜையும், அதை தொடர்ந்து மாவிளக்கு பூஜையும், முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு அலங்கார பூஜையும், 12 மணிக்கு இரவு உச்சிக்கால பூஜையும் நடந்தது. இரவு ஒரு மணிக்கு மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடந்தது.
கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை ஏற்பாடுகளை பிரம்மசக்தி அம்மன் கோவில் டிரஸ்ட் நிர்வாகம் மற்றும் பூசாரி பொன்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.


