ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியம் இந்தியாவிலேயே முதல் முதலாக திறக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தினை கனிமொழி எம்.பி. முன்னிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்துவைத்தார். கண்ணாடி பேழைக்குள் ஆய்வுக்காக தோண்டப்பட்ட குழியை உள்ளது உள்ளபடியே வைத்துள்ளனர். இதை அக்கம் பக்கத்து ஊர்களில் உள்ள மக்கள் ஆர்வமாக வந்து பார்த்து வருகின்றனர். தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து இருக்கும் படியாக ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
இந்த அருங்காட்சியகத்துக்கு மலேசியா சுலுத்தான் இது ரீசு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் இருந்து தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் நடந்த பன்னாட்டு கருத்தரங்கு வந்திருந்த 42 மாணவ மாணவிகள் வருகை தந்தனர். இவர்களுக்கு இணைப்பேராசிரியர் முனைவர் மனோன்மணிதேவி முத்து ஆறு அண்ணாமலை எ.பி.சி மகாலெட்சுமி கல்லூரி முதல்வர் க. சுப்புலெட்சுமி ஆகியோர் வழி காட்டினர்.
இவர்கள் சைட் மியூசியத்தினை பார்வையிட்டனர். அங்கே உள்ளது உள்ளபடியே இருந்த அருங்காட்சியகத்தினை கண்டு ரசித்தனர். மேலும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த எலும்பு, இரும்பு, மண்பாண்டம், தங்கம் உள்பட அகழாய்வில் கிடைத்த பொருள்களை பார்வையிட்டனர். இவர்களுக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விளக்கமளித்தார்.
இதுகுறித்து மலேசியா வளர் தமிழ் மன்ற தலைவர் வெண்ணிலவன் பாரந்தாமன் கூறும் போது, மலேசியாவில் சுலுத்தான் இது ரீசு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் பயின்று வரும் மாணவர்கள் தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரியில் நடைபெறும் பன்னாட்டு கருத்தரங்குக்காக வந்திருந்தோம். ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது என கேள்விப்பட்டு பார்க்க வந்«த்£ம். இங்கே தமிழ் குடியின் முன்னோர்களின் நாகரீகத்தினை உலக தரத்தில் காட்சி படுத்தப்பட்டிருப்பதை கண்டு மகிழ்ந்தோம். இந்தியாவில் இங்கே தான் முதல் முறையில் சைட் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். இந்த இடத்தில் முதல் வெளிநாட்டு பார்வையாளராக நாங்கள் தடம் பதித்து இருப்பது எங்களுக்கு பெருமையாக இருந்தது. இந்தியாவின் தென்கோடியில் தாமிரபரணி கரையில் தமிழர்களின் தொன்மை சின்னம் உள்ளது என்பதை நாங்கள் மலேசியாவில் சென்று அங்குள்ள மக்களிடையே பறை சாற்றுவோம் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தொல்லியல் கழக தலைவர் முனைவர் சுதாகர், பாளையாங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி வரலாற்றுதுறை பேராசிரியர் ஜோசப்ராஜ், முனைவர் கந்த சுப்பு, சிவகளை மாணிக்கம், வ.உ.சி கல்லூரி தமிழத்துறை இணைபேராசிரியர் கிருஷ்ணவேணி, வ.உ.சி.கல்வியல் கல்லூரி தமிழத்துறை உதவி பேராசிரியர் பாபு, ஏ.பி.சி. மகாலெட்சுமி மகளிர் கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசியர் புஷ்பக வல்லி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


