கருங்குளத்தில் ஆடி 18 ம் பெருக்கை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் சிறப்பு பூஜை நடந்தது. இந்த பூஜைக்காக சீர்வரிகை பொருள்களை பக்தர்கள் குலசேரக நாயகி சமேத மார்த்தாண்டேஸ்வரர் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் தாமிரபரணி ஆற்றுக்கு வருகை தந்தனர். அங்கு தாமிரபரணி புகைப்படத்தினை வைத்து சிறப்பு பூஜை ஆராதனை நடந்தது. அதன் பின் சிறப்பு ஜெபம் செய்யப்பட்டது. ஊர் செழிக்கவும், மழை வேண்டியும் சிறப்பு பிராத்தனை நடந்தது.


தொடர்ந்து தாமிரபரணியில் சிறப்பு அபிசேகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிவா பட்டர், ராஜேஷ் பட்டர், சேகர் பட்டர், செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து எழுத்தர் சங்கரபாண்டியன், சேது, சுந்தர வள்ளி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


