தூத்துக்குடி வ.உ.சி மற்றும் ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.
முதல் நாள் ஏ.பி.சி. மகாலெட்சுமி மகளிர் கல்லூரியில் துவக்க விழா நடந்தது . ஏ.பி.சி. வீ. கல்விக்குழுமம் தலைவர் ஏ.பி.சி.வீ. செக்க்லிங்கம் வரவேற்று பேசினார். இதில் ஏ.பி.சி மகாலெட்சுமி மகளிர் கல்லூரி 50 ஆம் ஆண்டு பொன்விழா இலச்சினை வெளியீடு நடந்தது. மலேசியா சுலுத்தான் இது ரீசு கல்வியியல் பல்கலைக்கழகம் இணைப்பேராசிரியர் முனைவர் மனோன்மணிதேவி முத்து ஆறு அண்ணாமலை வெளயிட்டார். கல்லூரி செயலாளர் சொ சுப்புலெட்சுமி பெற்றுக்கொண்டார்.

ஆய்வுக் கோவை வெளியீடு தொடர்ந்து நடந்தது. கருத்தரங்க நோக்க உரையை கல்லூரி முதல்வர் முனவைர் க. சுப்பு லெட்சுமி நிகழ்த்தினர். வ.உ.சி கல்லூரி முதல்வர் முனைவர் சொ. வீரபாகு வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி இணைப்பேராசிரியர் முனைவர் ச. மல்லிகா நன்றி கூறினார். அதன் பின் அமர்வு 1 ல் பழந்தமிழ இலக்கியத்தில் பல்லுயிர் ஓம்புதல் என்ற தலைப்பில் முனைவர் மனோன்மணி தேவி முத்து ஆறு அண்ணாமலை கருத்து வழங்கினார். சங்க இலக்கியத்தில் மொழியியியல் என்ற தலைப்பில் முனைவர் பிராங்கிளின் தம்பி ஜோஸ் கருத்துரை வழங்கினார். மதியம் ஆய்வுக் கட்டுரை வாசிக்கப்பட்டது.
இரண்டாம் நாள் வ.உ.சி கல்லூரி கலையரங்கில் அமர்வு 3 நடந்தது. உணர்வுகளின் உயிர்த்துடிப்பு நாட்டுப்புறப்பாட்டு என்ற தலைப்பில் கிராமத்துக் குயில் முனைவர் ஆ. சந்திரபுஷ்பம் பேசினார்.
நாட்டுப்புறக் கலைகளும் சமூக வீழிப்புணர்வும் என்ற தலைப்பில் கலைமாமணி அமலபுஷ்பம் பேசினார். அதன் பின் நிறைவு விழா நடந்தது.
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மா. முத்துசாமி வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் சொ. வீரபாகு தலைமை வகித்தார். வ.உ.சிதம்பரம் கல்வியளியல் கலலூரி முதல்வர் முனைவர் த. கனகராஜ் வாழ்த்தி பேசினார். தொல்லியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் தமிழ்ச்செம்மல் முத்தாலங்குறிச்சி காமராசு சிறப்புரை வழங்கினார். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ச . பாபு நன்றி கூறினார்.


