ஸ்ரீவைகுண்டம் அருகே வாலிபர் கொலை தொடர்பாக அண்ணன்-தம்பி இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் வழக்கறிஞர் உட்பட 9பேரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமம் சுடலை கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாயாண்டி (33). இவர் மீது செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் ஆடு, மணல் திருட்டு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இவர் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனை தடுக்க முயன்ற அவரது மனைவி செல்வி (30) என்பவரும் காயம் அடைந்தார்.
இந்த கொலை தொடர்பாக செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து, கால்வாய் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த சுடலைக்கண்ணு மகன்கள் ஆறுமுகம் (45), அர்ஜுனன் (40), ஆகிய 2பேரை போலீசாரை கைது செய்துள்ளனர். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் தெய்வக் கண்ணன் என்பவர் உட்பட 9பேர் மீது வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.


