தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய கிளைகள் தர்மாவரம் மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் இன்று திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஒரு தலை சிறந்த ஷெட்யூல்டு கமர்சியல் வங்கி, பங்கு சந்தைகளில் தனது பங்கினை பட்டியலிட்டதை அடுத்து தனது தொலைநோக்கு பார்வையாக மீண்டும் இந்தியா முழுவதுமான விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், வங்கியின் 537 மற்றும் 538வது கிளைகள் ஆந்திர பிரதேசம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் தர்மாவரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஏடிஎம் /சிஆர்எம் வசதியுடன் துவக்கியுள்ளது.
தர்மாவரத்தில் 538வது கிளையை மத்திய ஜவுளித் துறை பட்டுவாரிய அதிகாரி பிரகாஷ் திறந்து வைத்தார். உளுந்தூர்பேட்டையில் 538வது கிளையை வியாபாரிகள் சங்க தலைவர் முகமது கனி, திறந்து வைத்தார். விழாவில் வங்கியின் ஊழியர்கள், அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புதிய கிளைகள் திறப்பு குறித்து வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் விளக்கியதாவது: பங்குச்சந்தைகளில் பட்டியலிட்ட பிறகு வங்கியானது அதனை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் வேகம் காட்டும் விதமாக தனது செயல்பாடுகளை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று 537 மற்றும் 538வது புதிய கிளைகளை ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ் நாட்டில் துவக்கியுள்ளது. மேலும் இன்னும் அதிகமான கிளைகளை இந்தியா முழுவதும் திறந்திட திட்டமிட்டிருக்கிறது. இந்த புதிய கிளைகளின் துவக்க விழாவின் மகிழ்ச்சியினை வங்கியின் அனைத்து உடைமைதாரர்களுக்கும் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.


