தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி துவக்க விழா எல்.இ.டி., டெலிவிசன் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
7வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் – 2023 போட்டிகள் சென்னை மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் இன்று தொடங்கியது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டிகளை துவக்கி வைத்தார். இதன் துவக்க விழா நேரடி ஒளிபரப்பு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் எல்.இ.டி., டெலிவிசன் மூலம் பொதுமக்கள் பார்வைக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் முன்னிலையில் திறந்து வைத்தார்.
மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், துணை ஆட்சியர் கௌரவ்குமார் பயிற்சி தனித்துணை ஆட்சியர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ். அந்தோணி அதிஷ்டராஜ், நேருயுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் இசக்கி, தேசிய / மாநில அளவிலான ஹாக்கி விளையாட்டு வீரர்கள், துறைமுக ஆணைய ஹாக்கி விளையாட்டு வீரர்கள் மற்றும் காராப்பேட்டை இந்து நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் லசால் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் மற்றும் பல்வேறான ஹாக்கி வீரர் / வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள்.
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி டிராபி போட்டி 2வது முறையாக சென்னையில் நடைபெறுகிறது. இதற்கு முன்பாக 2007ஆம் ஆண்டு 7வது தொடர் சென்னையில் நடைபெற்றது. இந்த ஹாக்கி தொடரில் இந்தியா, மலேசியா, கொரியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் 5 முறை லீக் தொடரில் விளையாடும். லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். பைனல் போட்டி 12.08.2023 அன்று நடைபெறவுள்ளது. எனவே 03.08.2023 முதல் 12.08.2023 வரை நடைபெறவுள்ள ஆசிய ஹாக்கி போட்டியினை மாணவ.மாணவியர்கள், பொதுமக்கள் கண்டு களிக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


