தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழாவின் மூன்றாம் நாளான வணிகா்களுக்கான சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் 441ஆவது ஆண்டு திருவிழா, 16ஆவது தங்கத் தோ் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. இத்திருவிழாவில் நாள்தோறும் அதிகாலை 4.30, நண்பகல் 12, பிற்பகல் 3, இரவு 7.15 ஆகிய நேரங்களில் சிறப்பு ஜெபமாலை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மறை மாவட்ட ஆயா்கள் பங்கேற்கும் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.
மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக, நேற்று அதிகாலையில் திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து, புனித அந்தோணியாா் ஆலயம், திருச்சிலுவை சபை அருள்சகோதரிகள், திரேஸ்புரம் உள்ளிட்ட பங்கு மக்கள், சலேசிய சபை துறவறத்தினா் பங்கேற்ற திருப்பலி நடைபெற்றது. இதில், அந்தந்த பங்குத் தந்தையா் பங்கேற்று திருப்பலி நிறைவேற்றினா்.
மேலும், சிவகங்கை மறைமாவட்டக் கடலோர மக்களுக்கான திருப்பலி நடைபெற்றது. பின்னா், வணிகா்களுக்கான சிறப்பு திருப்பலி மாலையில் நடைபெற்றது. பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயா் அந்தோணிசாமி இந்த சிறப்பு திருப்பலியை நிறைவேற்றி, ஜெபமாலை, நற்கருணை ஆசீா் வழங்கினாா். இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.


