தூத்துக்குடி சிவன் கோவிலில் துர்க்கை அம்மனுக்கு வருஷாபிஷேகம் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவிலில் உள்ள ஸ்ரீ துர்க்கை அம்பிகைக்கு 52 வது ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. இதை ஒட்டி காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம் விக்னேஸ்வரர் பூஜை கும்ப பூஜை நடந்தது. அதை தொடர்ந்து51 வகையான அபிஷேகங்கள், அலங்கார தீபாரணை நடந்தது.
பின்னர் மாலையில் 101 திருவிளக்கு பூஜை நடந்தது. விழாவில் கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர்கள் கந்தசாமி, செந்தில்குமார், உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு, வளையல், குங்குமம், மஞ்சள் கயிறு, பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் பிரதான பட்டர்கள் செல்வம், சுப்பிரமணியன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஜெயராணி ஆகியோர் செய்திருந்தனர்


