தூத்துக்குடி பள்ளிகளில் தரமான சத்துணவு வழங்கப்படுகிறதா? என்று அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடியில் மடத்தூர் டி.என்.டி.டி.ஏ நடுநிலைப்பள்ளி, குரூஸ்புரம் செயிண்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, போல்பேட்டை தங்கம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் அமைச்சர் கீதாஜீவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சத்துணவின் தரத்தை ருசித்து பார்த்து ஆய்வு செய்தார். முட்டைகள் இருப்பு குறித்தும் பார்வையிட்டார். தொடர்ந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்கள் பெறும் முகாம்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். அந்த முகாம்களில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? என்றும் ஆய்வு செய்தார்.


