தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி அவர்களின் வழிகாட்டுதலின்படியும் ,உதவி திட்ட அலுவலர் முனியசாமி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ செல்வி அவர்களின் ஆலோசனைப்படியும் கருங்குளம் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டார அளவிலான குழு கூட்டம் வட்டார கல்வி அலுவலர் திருமதி, மரிய ஜெயசீலா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, கருங்குளம் ஹெல்த் இன்ஸ்பெக்டர் மற்றும் கிராம செவிலியர் சந்திரகோமதி , ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுனர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகளை வீடு வீடாகச் சென்று எவரும் விடுபடாமல் கணக்கெடுத்தல், அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தல், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உறுதி மொழியை ஒவ்வொரு பள்ளிகளிலும் ஒவ்வொரு மாதத்தின் முதல் திங்கள் கிழமை அன்று காலை வழிபாட்டு கூட்டத்தில் அனைவரும் எடுத்திட வேண்டும் எனவும், சைகை மொழியினை அனைவரும் அறிந்திடும் வண்ணம் தகவல் பலகையில் எழுதிட வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகளை கட்டாயம் பள்ளியில் சேர்த்தல் அவசியம் என்பதை வலியுறுத்தி தகவல் பலகையில் அதற்கான பேனர் வைத்தல் வேண்டும் என்பதை பற்றியும், ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாமில் எவரும் ஈடுபடாமல் கலந்து கொண்டிடவும், அவர்களுக்கு NID, UDID ஆகிய அட்டைகள் கிடைத்திடவும், தேவை உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் உடனே கிடைத்திட வழிவகை செய்திடவும், விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிந்து அவர்களை பள்ளி அளவிலும், வட்டார அளவிலும் ,மாவட்ட அளவிலும் ,மாநில அளவிலும் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும் எனவும், எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகம் மாற்றுத்திறனாளி மாணவர்களின் கற்றல் நிலைகளுக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருவதைப் பற்றியும், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பற்றியும் கூறப்பட்டது. இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், பிஸியோதெரபிஸ்ட், மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டார ஒருங்கிணைப்பாளர் பீபேகம் ,வட்டார வள மையம் ஏற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம் ஆகியோர் செய்திருந்தனர்.


