ரோட்டரிக் கிளப் சார்பில் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடிக்கு” சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் விருது” வழங்கப்பட்டது. மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ்.ஜே. கென்னடி கடந்த 25 ஆண்டு காலமாக சுற்றுச்சூழலை பாதுகாக்க, நிலத்தடி நீரை மேம்படுத்த, புயல், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்களை தடுக்க , நீர் பிடிப்பு பிடிப்பு பகுதிகளான ஆற்றங்கரை, வாய்க்காங்கரை, குளத்தங்கரை, பகுதியை வலுப்படுத்த, மண்ணரிப்பை தடுக்க அழிந்து வரும் தமிழர்களின் தேசிய மரமான பனை மரத்தை போற்றி பாதுகாத்து வளர்க்க வேண்டும். என்ற உன்னதமான குறிக்கோளோடு சேவை மனப்பான்மையுடன் எந்த வித நிதி ஆதாரமும் பெராமல் தொடர்ந்து ஒரு கோடி பனை மர விதைகளை விதைத்து வருகிறார். மேலும் தொடர்ந்து மரக்கன்றுகள் நடுதல், மரக்கன்றுகள் வழங்குதல், விதைப்பந்து விதைத்தல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை பள்ளி, கல்லூரி, மாணவ,, மாணவிகளுக்கும், மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கும்,மேலும் பொதுமக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு, விழிப்புணர்வு முகாம், கருத்தரங்கு, மாநாடுகளை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். மேலும் தூய்மை இந்தியா திட்டத்தில் கடற்கரை, பூங்கா, இந்து கோயில்கள், கிறிஸ்துவ ஆலயங்கள், முஸ்லிம் பள்ளிவாசல்கள், நூலகம், பேருந்து நிலையங்களையும், பொது இடங்களையும் சுத்தப்படுத்தும் பணியை தீர்வுபடுத்தி பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார். இந்த சேவையை அங்கீகரித்தது, பாராட்டி, ஊக்கப்படுத்தும் விதமாக திருநெல்வேலி ரோட்டரி கிளப் (ஸ்டார்) சார்பில் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவர்மான டாக்டர் கென்னடிக்கு “சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் விருது” வழங்கும் விழா திருநெல்வேலி ஹோட்டல் ஆர்யாஸில் அபிநயா அரங்கத்தில் வைத்து நடைபெற்றது.
திருநெல்வேலி ( ஸ்டார்) ரோட்டரி கிளப் தலைவர் என் சதீஷ் நாராயணன் தலைமை தாங்கினார். செயலாளர் பதுரு முஷாமில் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மாவட்ட ரோட்டரிக் கிளப் கவர்னர் முத்தையா பிள்ளை கலந்து கொண்டு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடிக்கு” சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் விருதினை ” வழங்கி பாராட்டினார் .இதில் ரோட்டரிக் கிளப்பை சார்ந்த தினேஷ் பாபு, சுந்தர மகாலிங்கம், பவுல் அண்ணா ,பிரைட்டன் மதுரம், ஆயூப் கான், ரைமன்ட் பற்றிக், பத்ரு முசாமில், பரசுராமன், ரங்கராஜ்,தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க தென் மண்டல தலைவர் ராம்குமார், தென் மண்டல செயலாளர். இம்மானுவேல், மாநிலத் துணைத் தலைவர் ஏ பொ. சுதாகர் காயல்பட்டினம் நகர தலைவர் காயல் பாலா லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர். விருது பெற்ற கென்னடியை அரசு அதிகாரிகள், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் , பனைப்பொருள் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள், மகளிர் சுய உதவிக் குழு பெண்கள்உட்பட பலரும் பாராட்டு வருகிறார்கள்


