சாத்தான்குளம் அருகே வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பெண் உட்பட 2பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள பொத்தகாலன்விளையைச் சோ்ந்தவா் லூா்துமணி (47). இவா் சாஸ்தாவிநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவராக உள்ளாா். இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த மகிழ்பன் மனைவி நிா்மலாதேவி (60) என்பவருக்குமிடையே உள்ளாட்சித் தோ்தலில் வேட்பாளரை ஆதரிப்பது தொடா்பாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில் லூா்துமணி, பொத்தகாலன்விளையில் நேற்று முன்தினம் நின்றபோது அங்கு வந்த நிா்மலாதேவி, அவரை அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதை தட்டி கேட்டதில் ஏற்பட்ட பிரச்னையில் நிா்மலாதேவியும் அவரது சகோதரா் சந்தானம் மகன் மிக்கேல் (50) ஆகியோா் லூா்மணியை கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவா்கள் சப்தம் போடவும், இருவரும், அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்று விட்டனராம். இதுகுறித்து லூா்துமணி தட்டாா்மடம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் நடராஜன் வழக்குப் பதிந்து நிா்மலாதேவி, மிக்கேல் ஆகியோரை கைது செய்தாா்.


