தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல் இவரது மகன் அஜித்குமார்(24). இவரும் அகரம் அருகே உள்ள கோவங்காடு பகுதியை சேர்ந்த சரவணகுமாரும் கடந்த வருடம் சென்னையில் பணியாற்றி வந்துள்ளனர். கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் ஒருநாள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சரவணகுமாரை அஜித்குமார் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சரவணகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை பள்ளிக்கரணை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து அஜித்குமாரை சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அஜித்குமார் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் தான் சொந்த ஊரான அகரத்திற்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி மாரி தங்கம் மாரி தங்கத்தின் தம்பி இறந்த சரவணகுமார். பாலமுருகனும் அஜித் குமாரும் தற்போது நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
இதற்கிடையில் பாலமுருகனின் மனைவி மாரி தங்கம் தனது தம்பியை கொலை செய்த அஜித்குமார் உடன் பழக்க வைத்திருப்பதாக கூறியுள்ளார். மனைவி கூறியதால் ஆத்திரம் அடைந்த பாலமுருகன் இன்று தனது நண்பர்களுடன் சேர்ந்து மாறமங்கலம் பகுதியில் நின்றுள்ளார்.
அப்போது அஜித்குமாரும் அவரது நண்பருமான அதே பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் உடன் சேர்ந்து இருவரும் வேலையை முடித்துவிட்டு பைக்கில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். மாறமங்கலம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்து அஜித்குமார் வந்த பைக்கை பாலமுருகன் வழிமறித்துள்ளார். பின்னர் கையில் வைத்து கையில் மறைத்து வைத்திருந்த அறிவாளால் அஜித் குமாரை சரமாரியாக வெட்டி உள்ளார். பாலமுருகனுடன் வந்தவர்களும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அஜித்குமார் பலியானார்.
இந்த சம்பவம் குறித்து ஏரல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இது குறித்து ஏரல் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மூவரையும் தேடி வருகின்றனர்.


