தூத்துக்குடியில் மீனவ பெண்களுக்கு மீன் விற்பனை செய்வதற்கான உபகரணங்களை அமைச்சா் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி 8ஆவது வாா்டு திரேஸ்புரம் பகுதியில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சியில், மீனவ பெண்கள் வியாபாரம் செய்வதற்கு உபகரணங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனா். இந்தக் கோரிக்கையை ஏற்ற அமைச்சா் கீதாஜீவன், 9 மீனவ பெண்களுக்கு பெரிய அலுமினிய கூடை உள்ளிட்ட 3 வகையான உபகரணங்களை சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், துணை மேயா் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் நிா்மல்ராஜ், வழக்குரைஞா் பாலகுருசாமி, பகுதிச் செயலா் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினா் பவானி மாா்ஷல், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.
இதனைத் தொடா்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மகப்பேறு சிகிச்சை பிரிவு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீா் வழங்கும் இயந்திரத்தினை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சா் திறந்து வைத்தாா். இந்நிகழ்வில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சிவக்குமாா், துணை முதல்வா் கலைவாணி, உறைவிட மருத்துவா் ஜே. சைலஸ் ஜெயமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.


