தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பஜார் பகுதியில் கடந்த ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் சுற்றித்திரிந்த சிலரை மீட்டு அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மனநல காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை பெற வைத்தனர். இந்த நிலையில் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர்கள் தற்போது பூரண குணமடைந்துள்ளனர். அவர்களை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


