தூத்துக்குடி மாநகர் முழுவதும் ஆல் கன் டிரஸ்ட் என்ற தனியார் அமைப்பு சார்பில் சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் தலைமை வகித்தார். இதில் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், சமூக அக்கறையுள்ள பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு சாலையோர மக்களுக்கு உணவு வழங்கினர்.


