கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 37 வது ஆண்டு மாணவர் மன்றம் சார்பாக தொழில் வழிகாட்டுதல் பயிற்சி முகாம் இன்று நடந்தது.
இந்த முகாமிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் தேரடிமணி தலைமை வகித்தார். மாணவர் மன்ற ஆலோசகர்கள் முனைவர் சீனிவாசன், ஹேமலதா, ஜோதிமணி ஆகியோர் நிகழ்ச்சியினை வழி நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முனைவர் மைக்கேல்ராஜ் மற்றும் இந்திய தகவல் சேவை ஜெனரல் கூடுதல் இயக்குனர் பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்று மாணவர்களை ஊக்குவித்தனர். அவர்கள் மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் பல்வேறு துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றியும் எடுத்துரைத்தனர். இதில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


