தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஸ்ரீபராங்குசநல்லூரில் அப்பகுதியைச் சேர்ந்த சலவைத்தொழிலாளர்கள் தங்களுக்கு சலவைத்தொழில் செய்வதற்கு சலவைக்கூடம் கட்டிடத்தர வேண்டும் என்று ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று சலவைத் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான புதிய சலவைக்கூடம் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பணி தொடங்கியது.
இந்த பணியினை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.


