பணி மாறுதலுக்காக செல்லும் கலெக்டர் மருத்துவர் கி.செந்தில் ராஜ் அவர்களுக்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி அவர்கள் நன்றியுடன் வாழ்த்து தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவராக மிக சிறப்பாக பணியில் செய்து வந்த மருத்துவர் கி. செந்தில்ராஜ் இ.ஆ.ப அவர்கள் கூட்டுறவு சங்கங்கள் பதிவாளராக பணி மாறுதல் பெற்று சொல்லும் கலெக்டருக்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி அவர்கள் நேரில் சந்தித்து நன்றியுடன் வாழ்த்து தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவராக பணி செய்த கடந்த மூன்று ஆண்டுகளில் மருத்துவர் கி. செந்தில்ராஜ் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்காக நேரம், காலம் பாராமல் நேர்மையாய், உண்மையாய் உழைத்தார். ஏழை, எளிய மக்கள் எந்நேரமும் கலெக்டரை சந்தித்து குறைகளை தெரிவிக்கும் வகையில் எளிமையாய் இருந்தார். தனது கவனத்திற்கு வந்த குறைகளை உடனுக்குடன் செய்து கொடுத்தார். பல்வேறு பிரச்சனை கூட மிக சுலபமாக, சுமுகமாக பேசி தீர்த்தார். கடந்த சட்டமன்ற தேர்தலை தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக தேர்தலை நடத்தி முடித்ததற்காக புதுடெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில், தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தலைமையில் நடைபெற்ற பன்னிரண்டாவது தேசிய வாக்காளர் தினத்தில் (2021 – 22), சிறந்த தேர்தல் நடைமுறைகளுக்கான தேசிய விருதினை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ அவர்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மருத்துவர் செந்தில்ராஜ் அவர்களுக்கு வழங்கினார் மேலும் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஜுன் 2022ல் நடைபெற்ற மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில், மனித உரிமைகளை பாதுகாப்பதில் சிறப்பாக செயல்பட்டதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மருத்துவர் செந்தில்ராஜ்-க்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி கௌரவித்தார் மாவட்டத்தில் மதர் சமூக சேவை நிறுவனம் மற்றும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கம் முன்னெடுத்து வரும் ஒரு கோடி பனை மர விதை விதைக்கும் பணியை ஊக்கப்படுத்து விதமாக 2021 ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்று ஓரங்களில் ஒரே நாளில் 10,000 பனைமர விதை விதைக்கும் பணியையும் மேலும் தூத்துக்குடி மாவட்டம் உதயமான 36 ஆம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு காயல்பட்டினம் கடற்கரையில் ஒரே நாளில் 36 ஆயிரம் பனைமர விதை நடுப் பணியை நேரில் கலந்து கொண்டு தூக்கி வைத்தார்கள். ஒரு கோடி பனை விதை விதைக்கும் இலக்கை அடைவதற்கு எங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளார். கூட்டுறவு சங்கங்கள் பதிவாளராக பணி மாறுதல் பெற்று செல்லும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கி செந்தில்ராஜ் இ ஆ ப அவர்களுக்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி பனைப் பொருட்கள் வழங்கி வாழ்த்தி நன்றி தெரிவித்தார்


