கடந்த மூன்று ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் அவர்களோடு பயணித்த அனுபவம் வாழ்வில் மறக்க முடியாதது. குறிப்பாக அவரோடு இரண்டு புத்தககண்காட்சியில் பயணித்தது. 6 அரசு விழிப்புணர்வு படம் எடுத்தது. நான்கு நூல்களுக்காக பயணித்தது. இதில் ஒன்று மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட நூல்( தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள்). ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்துக்காக பயணித்தது. தூத்துக்குடி மாவட்ட கலை இலக்கிய இசை சங்க உறுப்பினராக நியமித்தது. கலைபண்பாட்டு துறை மூலமாக தமிழக அரசின் கலைவளர்மணி விருது அளித்தது என தொடர்ந்து கூறிக்கொண்டே போகலாம்.
மரம் நடும் நிகழ்ச்சிகளை கிராம உதயம் மூலமாக மாவட்ட ஆட்சி தலைவரை வைத்து தாமிரபரணி கரையில் மரம் நடும் விழா நடத்தியது உள்பட பல்வேறு பணிகளை மனமுவர்ந்து செய்தோம். சுமார் 10 ஆயிரம் பேருக்கு மரக்கன்று கொடுத்தோம். எனவே தான் இந்த மூன்று ஆண்டுகளும் என் வாழ்வில் பொற்காலம் என்றேன். தற்போது நமது ஆட்சியர் பணி மாறுதல் பெற்று சென்னை செல்கிறார். அவரை சந்தித்து நன்றி தெரிவிக்க எழுத்தாளர் நெய்தல் ஆண்டோ, கிராம உதயம் மேலாளர் வேல்முருகன், ராமசந்திரன், சிஷ்யன் சுடலை மணி செல்வன் ஆகியோர் சென்றோம். வெளியே இருந்து அலுவலகம் வந்த மாவட்ட ஆட்சியர் எங்களை உடனே அழைத்தார். நாங்கள் அவர் அறைக்கள் சென்றோம். அவர் எனக்கு பொன்னாடை போர்த்தி தமிழக அரசின் கலை வளர் மணி விருதை ( விருது வழங்கும் போது சார் இல்லாத காரணத்தினால் தற்போது அவர் கரத்தினால் மீண்டும் பெற்றுக்கொண்டேன்) அளித்தார்கள். நெய்தல் ஆண்டோ அவர்களுக்கு தான் கையெழுத்து இட்ட எனது தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள் நூலை கொடுத்து மகிழ்ந்தார். இந்த நூலை பொறுத்தவரை தூத்துக்குடி மாவட்டம் வருகை தரும் தமிழக முதல்வர் உள்பட பல்வேறு தலைவர் மற்றும் அலுவலர்கள் ,அமைச்சர் பெருமக்கள், கிராமத்தில் உள்ள நூலகங்களும் கொடுத்துள்ளார்.

மாவட்ட ஆட்சி அலுவலகத்திற்காக என்னை பல விதத்தில் நமது மாவட்ட ஆட்சி த்தலைவர் பயன்படுத்தினார். சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்படத்தினை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக வளாகத்தில் வைக்கும் போது அவர்களை பற்றி எழுத எனக்கு வாய்ப்பு தந்தார்கள். இதுபோல் பல பணிகள். சுதந்திர தினவிழாவில் எனக்கு , என் மகன் அபிஷ் விக்னேஷ், சிஷ்யன் சுடலைமணிச்செல்வன், கிராம உதயம் தொண்டு நிறுவனம், இசை அமைப்பாளர் இசக்கியப்பன், மகள் ஆனந்த சொர்ண துர்க்கா ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். நாங்கள் நண்பர்கள் குடும்பத்தோடு உழைத்தோம். அதற்கு உரிய மரியாதையும் நமது ஆட்சியர் கொடுத்து மகிழ்ந்தார். மிக்க நன்றி சார். தொடர்ந்து வருகின்ற மாவட்ட ஆட்சி தலைவருக்கும் தாங்கள் ஆதரவு தர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். நிச்சயம் ஆதரவு தருவோம் சார். என்னை மாவட்ட ஆட்சி தலைவரிடம் அறிமுகம் செய்து வைத்த ஸ்ரீவைகுண்டம் முன்னாள் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், இந்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் டாக்டர் அருண் ராஜ் உள்பட நண்பர்களுக்கு எங்கள் குழுவின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


