புதுக்குளம் ஊராட்சியில் ஒரு குடும்பத்துக்கு 2 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
கிராமங்களில் தென்னை விவசாயத்தை பெருக்கும் வகையிலும், வீடுகளில் தென்னையை வளர்த்து பேண வலியுறுத்தும் வகையில் வேளாண்மைத்துறை சார்பில் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு இரண்டு தென்னங்கன்றுகள் இலவசமாக வேளாண்மை துறை மூலம் வழங்கப்பட்டது. இதனை உதவி வேளாண்மை அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன் முனீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு தென்னங்கன்றுகளை வழங்கினர். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


