சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிககோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு கருத்தரங்கு நடைபெற்றது.
கல்லூரி துணை முதல்வர் மகேஷ்குமார் தலைமைவகித்தார். முதலாம்ஆண்டு ஆங்கில துறை மாணவி தனலெட்சுமி வரவேற்றார்.நிகழ்ச்சியை ஆங்கிலத்துறை மாணவிகள் சித்ரா, பவித்ரா தேவி ஆகியோர் தொகுத்து வழங்கினர். இதில் திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியை மெர்லின்சித்ராசெல்வி, சாத்தான்குளம் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியை கோகிலா, திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிபேராசிரியர் செல்வகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் மாணவ, மாணவிகள்,பேராசிரியர்கள் பங்கு பெற்றனர். மூன்றாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி பகவதி நன்றி கூறினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழக உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


