தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட வருவாய் கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் உடனடியாக தீர்த்து வைக்கும் பொருட்டு ஆண்டுதோறும் மே மாதங்களில் ஜமாபந்தி நடைபெறும்.
இதன்படி இந்த ஆண்டிற்கான ஜமாபந்தி ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தொடங்கியது. மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரான அபுல்காசிம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
முதல் நாளான இன்று ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு உட்பட்ட வல்லநாடு உள்வட்ட பகுதிகளான கலியாவூர், ஆலந்தா, பூவாணி, சிங்கத்தாகுறிச்சி, வடவல்லநாடு, வல்லநாடு கஸ்பா, ஆழிகுடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரான அபுல் காசிமிடம் மனுக்கள் அளித்தனர். அதில் பலருக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டது.
தொடர்ந்து இந்த ஜமாபந்தி வருகின்ற 24ம் தேதி வரை நடைபெறுகிறது.


