\தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பள்ளிவாசல் நடுத்தெருவை சேர்ந்தவர் ஜெயலாலுதீன் மகன் ரியாஸ். இவர் ஸ்ரீவைகுண்டத்தில் மெடிக்கல் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி பாத்திமா.
அதே போல் காயல்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த விநாயகம் மகன் முத்து கருப்பசாமி.
ரியாசும், அவரது மனைவி பாத்திமாவும் திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆழ்வார்திருநகரி அருகே உள்ள கேம்பலாபாத் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ரியாஸ் பைக்கும் முத்து கருப்பசாமி பைக்கும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.
இதில் ரியாஸ் மற்றும் அவரது மனைவி பாத்திமா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். முத்து கருப்பசாமிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரியாஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


