தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த சின்னத்தம்பி மகன் கிருஷ்ணமூர்த்தி (23) மற்றும் அவரது நண்பர் தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த மாரியப்பன் மகன் மாரிதங்கம் (23) ஆகியோருக்கும், புதுக்கோட்டை போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் ஆனந்த் (எ) செரட்டை ஆனந்த் (35) மற்றும் புதுக்கோட்டை மறவன்மடம் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் மகன் முருகன் (32) ஆகியோருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 14.05.2023 அன்று கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாரித்தங்கம் ஆகியோர் தூத்துக்குடி ராஜகோபால்நகர் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஆனந்த் (எ) செரட்டை ஆனந்த் மற்றும் முருகன் ஆகிய இருவரும் சேர்ந்து அவர்களிடம் தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சண்முகம் வழக்குபதிவு செய்து எதிரி ஆனந்த் (எ) செரட்டை ஆனந்த் என்பவரை கைது செய்தார். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு மற்றொரு எதிரியான முருகனை தேடி வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி ஆனந்த் (எ) செரட்டை ஆனந்த் மீது என்பவர் மீது சிப்காட் காவல் நிலையத்தில் திருட்டு உட்பட 5 வழக்குகளும், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும் என 7 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


