தூத்துக்குடியில் ஐநா சபையின் சர்வதேச அமைதி தினத்தை ஒட்டி வழக்கறிஞர்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.
தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில், மகாத்மா காந்தி மக்கள் இயக்கம் சார்பில் ஐநா சபையின் சர்வதேச அமைதி தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மூத்த வழக்கறிஞர் எஸ்.எஸ்.பி. அசோக் தலைமையில், வழக்கறிஞர் எஸ்.பி. வாரியார் முன்னிலையில் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர்கள் விக்டர் அண்டோ, கிங்ஸ்டர், சின்னத்தம்பி, ஜெயபால், ரசல், பால்துரை, கருப்பசாமி, லிங்கராஜா, ரூபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


