திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூன் 2ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது.
இது தொடா்பாக கோயில் இணை ஆணையா் மு. காா்த்திக் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரத் திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 2ஆம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக, விசாகத் திருவிழா வசந்த திருவிழாவாக இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.
விழா நாள்களில் நாள்தோறும் பகலில் சுவாமி ஜெயந்திநாதா் தங்கச் சப்பரத்தில் கோயில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறாா். மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையாகி, கிரிவீதி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து கோயில் சோ்கிறாா்.
10ஆம் நாளான ஜூன் 2ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், முற்பகல் 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனையாகிறது. பின்னா், சுவாமி ஜெயந்திநாதா் கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சோ்கிறாா். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெறுகிறது.
தொடா்ந்து, வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரா்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெறுகிறது. பின்னா், மகா தீபாராதனையாகி தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோயில் சோ்கிறாா். பக்தா்கள் வசதிக்காக ஜூன் 1, 3 ஆகிய இரு நாள்கள் கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, தொடா்ந்து பூஜைகள் நடைபெறும்” என்று கோயில் இணை ஆணையா் தெரிவித்துள்ளார்.


