கபிலன் (பிறப்பு: மே 16, 1977) என்பவர் பரவலாக அறியப்படும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும், நடிகரும் ஆவார். புதுச்சேரியில் பிறந்த இவர் 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியிலிருந்து திரைப்படங்களுக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் பாடல்கள் எழுதத் தொடங்கினார். 2014 ஆம் ஆண்டைய யான் திரைப்படத்திற்கு இவர் எழுதிய “ஆத்தங்கர ஓரத்தில்” பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான விஜய் விருதை பெற்றிருக்கிறார்.


