மனிதர்களோடு உறவாடத்
துடிக்கும் சிட்டுக் குருவிகள்
சமீபகாலமாக, விரைவாக
அழிந்து வருகிறது.
அழிந்து வரும் சிட்டுக்குருவி
இனத்தைக் காப்பாற்ற ஒரு சிறு
முயற்சியாய் கடந்த 6 ஆண்டு களாக , அட்டைப்பெட்டியில் கூடுகள் செய்து இலவசமாக கொடுத்து வருகிறேன்.
மாணவர்களிடையே நல்ல
வரவேற்பு. வாங்கிச் சென்று
நனையாத இடத்தில் கட்டிவருகி
றார்கள். தவிர குருவிகள் அதில்
தங்கி இனப்பெருக்கம் செய்து
வருவதை ,அவர்கள் சொல்லும்
போது மகிழ்ச்சியே.
கடந்த 2022ஆண்டில் மட்டும் 1187
கூடுகள் செய்து கொடுத்துள்
ளேன். அதைப் பற்றி ஒரு தகவல்.
1.ஒரு கூடு செய்ய அரை மணி
நேரம் ஆகிறது. மொத்தம் 594 மணி நேரம் ஆகி உள்ளது. நேரம் கிடைக்கும் போதெல்லாம்
பெட்டிகள் செய்வது குறிப்பிடத்
தக்கது.
2. ஒரு கூடு செய்ய ஆகும்
செலவு ரூ 40 ஆகிறது. ஆக
1187 கூடுகளுக்கு 47480 ரூபாய்
ஆகி உள்ளது. ஆனால் இலவச
மாகவே கொடுக்கப்பட்டுள்ளது.
3. கடந்த ஒரு வருடத்தில் பள்ளி,கல்லூரி, தன்னார்வலர்
களுக்கு ,கூடு எப்படி செய்ய
வேண்டும் என்ற பயிற்சி அளிக்
கப்பட்டது. 3000 பேருக்கு பயிற்சி
அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள்
மூலம் உத்தேசமாக 500 கூடுகள்
வரை செய்திருக்க முடியும்.இதன்
மூலம் குருவிகள் பற்றிய விழிப்
புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
4. ஒரு கூடு சராசரி 30 குருவி
கள் இனபெருக்கம் செய்து அதில் தஞ்சம் அடைய காரணமா
கிறது.
5. கூடுகள் 1187 + 500 = 1687
என கூடுகள் ஒருவருடத்தில்
ஆகும் போது , இதில் 70%
கூடுகளில் குருவிகள்
தங்கினால் 35400 குருவிகள்
இனபெருக்கம் ஆகி உள்ளது என
மதிப்பிடப்படுகிறது. இதிலும்
20% கழித்தால் 27320 குருவிகள்
பெருகி உள்ளதைக் காணமுடி
கிறது.
(15நாட்களில் பொரித்துவிடும்)
6. இதை எம் பகுதியில்
நேரடியாக காணலாம். ஒன்றி
ரண்டாக காணப்பட்ட குருவிகள்
இப்போதும் எங்கும் காணமுடிகி
றது.
7. தவிர குருவிகளை கொன்று
குவிப்பது தடுக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் ஆர்வமாக குருவிக
ளுக்கு அவரவர் வீட்டில் சோறு,
தானியங்கள், நீர் வைப்பதைக்
காணமுடிகிறது. தவிர குருவிகள்
பற்றிய விழிப்புணர்வு வாசகங்
களை அச்சிட்டு மாதத்திற்கு ஒரு
முறை பத்திரிகைகளில் வைப்பது நல்ல முன்னேற்றத்தை
தந்துள்ளது.
நீங்களும் உங்கள் பகுதியில்
ஒரு சிறு முயற்சியாக செய்து
பாருங்கள். அழிந்துவரும் சிட்டுக்
குருவி இனத்தைப் பெருக்கி
விடலாம்.
கதிர்வீச்சுகளால் அது அழிந்து
வருகிறது என்று சொன்னாலும்,
அதோடு வாழ்ந்து தம் இனத்தை
காப்பாற்ற அது பழகிக்கொள்கி
றது. மட்டுமின்றி கூரை வீடுகள்
இல்லாதது, பயிர்களுக்கு மருந்து
அடிப்பதனாலே அவ்வினம் பெரு
வாரியாக அழிந்துவிட்டது.
பல்லுயிர் பெருக்கத்திற்கு
முக்கிய காரணமாக விளங்கும் சிட்டுக்குருவிகளின் இனத்தைப் பாதுகாப்போம். இவைகளைப்
பாதுகாப்பது, இயற்கைக்கும்
இறைவனுக்கும் செய்கின்ற
தொண்டு ஆகும். முயற்சிப்போம்.
கடந்த 6 ஆண்டுகளில் 5000 கூடுகள் செய்து இலவசமாக
கொடுத்துள்ளேன்.
(விழிப்புணர்வுக்காகவே இது
பதிவிடப்படுகிறது)
குறிப்பு:-குருவிக்கூடு வேண்டு
வோர் தொடர்பு
கொள்ளவும். (இலவசம்)
கிரிக்கெட்மூர்த்தி
Asst. Director of Statistics (Rtd)
விக்கிரமசிங்கபுரம்
திருநெல்வேலி Dt.
9942307679.


