தூத்துக்குடியில் தொடுவானம் கலை இலக்கியப் பேரவை மற்றும் காட்சில்லா கலைக்கூடம் பதிப்பகம் இணைந்து நடத்திய நூல்கள் வெளியீட்டு விழா பாம்ஸ் அகாடமி அரங்கத்தில் நடைபெற்றது
அருட்தந்தை செல்வராசு தலைமை தாங்கினார். தொடுவானம் இலக்கிய இதழ் ஆசிரியர் நெல்லை தேவன் தொகுத்து வழங்கினர் . ஊத்து மலை பட்டதாரி தமிழாசிரியர் கவிஞர் தங்கத்துரையரசி வரவேற்றார்.
மாரி முத்து எழுதிய “நேசக்குளத்தில் நித்தமொரு கல்” கவிதை நூலை தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை விசாகன் வெளியிட்டார். முதல் படியை கிராமப்புறத் தமிழ்மன்றத் தலைவர் கவிஞர் தேவதாசன் பெற்றுக்கொண்டார்
தூத்துக்குடி முனைவர் பட்ட ஆய்வாளர் லில்லி மலர் நூலைத் திறனாய்வு செய்து பேசினார்.
நெல்லை தேவன் எழுதிய “சுமைகூலி” சின்னஞ்சிறு கதைகள் நூலை எழுத்தாளர் முத்தலாங்குறிச்சி காமராசு வெளியிட்டார். முதல்படியை எழுத்தாளர் கண்ணகுமார விஸ்வரூபன் பெற்றுக்கொண்டார்.
நூலைத் திறனாய்வு செய்து பேசினார்கள் தூத்துக்குடி தூய மரியன்னை பெண்கள் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் அருட்சகோதரி எழிலரசி, தூத்துக்குடி எழுத்தாளர் முகமதுயூசுப் ஆகியோர் திறனாய்வு செய்தார்.
தூத்துக்குடி கவிஞர் வருணன், தூத்துக்குடி காதைக்களம் அமைப்பின் அன்புராஜ், தூத்துக்குடி வீதி நாடகக் கலைஞர் சக்திவேல், தூத்துக்குடி ஆகம் கலையத்தைச் சோந்த கார்த்திக் , நமது எழுத்தாணி யூடியூப் சிவா ஆகியோர் இரண்டு நூல்களையும் வாழ்த்திப் பேசினார்கள் . நேசக்குளத்தில் நித்தமொரு கல் நூலாசிரியர் கவிஞர் மாரிமுத்து அவர்களும் சுமைகூலி நூலாசிரியர் கவிஞர் நெல்லை தேவன் அவர்¢களும் ஏற்புரை வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொடுவானம் கலை இலக்கிய பேரவையும் மற்றும் காட்சில்லா கலைக்கூடமும் இணைந்து செய்திருந்தது.


