தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே உள்ள வடக்கு கோவங்காடு கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவர் மகன் தனுஷ். 19 வயதான இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் இன்று மாலை தனது வீட்டில் மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார்.
அப்போது திடீரென மின்சாரம் தாக்கி தனுஷ் மயங்கி விழுந்தார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சாயர்புரம் போலீசார் வழக்குப்பதிவு சயெ¢து விசாரணை நடத்தி வருகின்றனர்.


