தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சிஐடியு சங்கத்தின் சார்பில் தொழிலாளர்களின் விடிவெள்ளி ஒப்பற்ற தலைவர் வி,பி.சிந்தன் அவர்களின் 36 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்காக பணிமனை முன்பு அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் நம்பிராஜன், சிஐடியு மாநில சம்மேளன குழு உறுப்பினர் சங்கிலி பூதத்தான் மற்றும் போக்குவரத்து சங்க நிர்வாகிகள் லட்சுமணன், சண்முகவேல், கணேசன், ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


