தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் ஸ்டான்லி தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். அவரது மகன் காளீஸ்வரன். 23 வயதான இவர் அந்த பகுதியில் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்துள்ளார்.
நேற்று இரவு உணவு அருந்தி விட்டு தனது அறையில் படுக்க சென்றுள்ளார். காலை நீண்ட நேரமாகியும் அவரது அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. சந்தேகமடைந்த தந்தை அவரது அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது அவர் அங்கிருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து நாசரேத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


