புன்னக்காயல் கிராமத்தில் வசிக்கும் 840 நபர்களுக்கு குடியிருப்பு பட்டாக்களை கனிமொழி எம்பி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் புன்னக்காயல் கிராமத்தில் வசிக்கும் 840 நபர்களுக்கு குடியிருப்பு பட்டாக்களை கனிமொழி எம்பி வழங்கினார். விழாவில் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட ஊராட்சி தலைவர் அ.பிரம்மசக்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் எஸ்.ஜனகர், புன்னக்காயல் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.சோபியா ஆகியோர் உடன் உள்ளனர்.


