தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான தூர் வாரும் பணிகளை எம்பி கனிமொழி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கோரம்பள்ளம் உப்பார் ஓடை உபரி நீர வழிந்தோடி ரெகுலேட்டர் அருகே தூர் வாருதல், சூழலியல் பூங்காவிற்கு மண் வழங்குதல் போன்ற 12 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை திமுக மாநில துணை செயலாளரும், எம்பி,யுமான கனிமொழி கருணாநிதி இன்று (07.05.2023) காலை கொடி அசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளரும், மீன் வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினரும், ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதி உறுப்பினருமான சண்முகையா, மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் உமரி சங்கர், தூத்துக்குடி மத்திய ஒன்றிய கழக செயலாளர் ஜெயக்கொடி, மற்றும் பொது பணி துறை அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், விவசாய சங்க நிர்வாகிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


