அனவரதநல்லூரில் மாற்றுத்திறனாளிகள் புதிய கிளை தொடக்க விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனவரதநல்லூரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க புதிய கிளை தொடக்க விழா நடந்தது.
புதிதாக தொடங்கிய இந்த அனரதநல்லூர் கிளையில் புதிய தலைவராக அருணாசலத்தம்மாள், செயலாளராக முத்துரத்தினம், பொருளாளராக பழனியம்மாள், துணை தலைவராக கோட்டைதாய், துணைச் செயலாளராக மந்திரமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மார்ச் மாதம் வரை 100 நாள் வேலையில் கூலி வங்கியில் ஏறவில்லை. இதனை உடனடியாக வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளின் 100 நாள் வேலை கேட்டு விண்ணப்பிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் அட்டை இணைப்பில் உள்ள குளறுபடியை உடனடியாக நீக்க வேண்டும், தேசிய அடையாள அட்டை உடனடியாக வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில குழு உறுப்பினர் கண்ணன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.


