தூத்துக்குடியில் நாளை ஞாயிற்றுக் கிழமை இலவச கண் புரை பரிசோதனை முகாம் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்க நிதி உதவியுடன் அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சகாய அன்னை முதியோர் இல்லம் இணைந்து நடத்தும் இலவச கண்புரை பரிசோதனை முகாம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை லயன்ஸ் 6வதுதெருசகாய அன்னை நர்சரி&பிரைமரி பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் கண் புரை நோயாளிகளுக்கு ஆபரேசன் இலவசமாக செய்யப்படும். மேலும் கண் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. முகாமில் பயன்பெற ஆதார் நகல் மற்றும் செல்போன் நம்பர் கொண்டு வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு 98652 96870 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


