தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வஉசி துறைமுக ஆணைய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன் நிபந்தணையின்றி சம்பளம் வழங்க வேண்டும், 2020-21, 2021-22 ஆண்டுக்கான போனசை உடனே வழங்க வேண்டும், பணமாக்கல் திட்டத்தில் துறைமுக சொத்துக்களை விற்க கூடாது, புதிய பென்சன் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும், துறைமுக கேண்டீன் & காண்ட்ராக்ட் ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என கோரிக்கைகைள வலியுறுத்து தூத்துக்குடியில் வ.உ.சி. துறைமுக ஆணைய அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் புதிய துறைமுகம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கம் சிஐடியு பாலகிருஷ்ணன், சுதீந்திர குமார், கே.காசி, மீனாட்சி சுந்தரேசன், போர்ட் மெரைன்ஸ் அன்ட் சென்ரல் ஸ்டாப் யூ னியன் ஹெச்எம்எஸ் சத்ய நாராயணன், ஆரோக்யராஜ், போர்ட் யுனைடட் ஒர்க்கர்ஸ் அன்ட் ஜெனரல் ஸ்டாப் யூனியன் HMS (w) ஜான் கென்னடி, கிளிண்டன், ஜீடு, நேசனல் ஹார்பர் ஒர்க்கர்ஸ் யூனியன் ராஐேகாபாலன், சந்திரசேகர், ஸ்டீபன், போர்ட் எம் பிளாயீஸ் டிரேட் யூனியன் விஜய் செல்லையா, வ.உ சி போர்ட் எம்பிளாயீஸ் டிரேட் யூனியன் ஏ.ஐ.டியுசி பாலசிங்கம், போர்ட் ஜெனரல் ஸ்டாப் யூனியன் செல்வகுமார், போர்ட் அண்ணா டாக் சங்கம் சண்முககுமாரி உட்பட பலர் பங்கேற்றனர்.


